பெரியகுளம் அருகே ஜெய் மங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் ஊராட்சியில்
100 நாள் வேலை உறுதிதிட்டத்தின் ( MGNREGA ) கீழ் தமிழகத்திற்கு 4034 கோடி நிதியை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன
திமுக நகர் செயலாளர்கள் பெரியகுளம் முகமது இலியாஸ் தேனி எம் .சி.நாரயண பாண்டியன் போடிநாயக்கனூர் ஆர் . புருஷோத்தமன் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தாமரைக்குளம் ச. பால்பாண்டி தென்கரை வி நாகராஜ் வடுகபட்டி நடேசன் உள்பட
மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.