கரூர் செய்தியாளர் மரியான் பாபு

தனியார் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் பங்கேற்பு.. கரூர், ஜெய்ராம் வித்யா பவன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் துறை வளர்ச்சி மேம்பட உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும்சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் பல லட்சக்கணக்கான நபர்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்று தந்துள்ளார்கள். படித்த இளைஞர்கள் மற்றும் மகளிர் முன்னேற வேண்டும் என்ற உணர்வோடும் அக்கறையோடும் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்கள்.


நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 141 முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட 1832 நபர்களில் 263 நபர்களுக்கு முதல் கட்டமாக உடனடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 196 நபர்களை வேலையளிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மொத்தம் 549 பயனாளிகளுக்கு ரூ.4.55 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இம்மு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் தங்கவேல், ஜெயராம் கல்லூரி முதல்வர், அரசு அதிகாரிகள் வட்டாட்சியர், மாணவ, மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *