மக்கள் நேரில் சந்தித்து புகார் அளித்த 15 மணி நேரத்தில் கழிவு நீரில் நடந்து சென்ற 2 மணி நேரம் ஆய்வு செய்த மேயர் ஜெகன்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 51 வது வார்டு மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சந்தித்து தங்களது வார்டில் உள்ள குறைகளை எடுத்துக் கூறி தாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த வார்டு பொதுமக்கள் மேயர் ஜெகன் இடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக நாளை வருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் இதனை அடுத்து 51 வது வார்டு பகுதிக்கு மே ஜெகன் நேரில் சென்றார் ஒவ்வொரு தெருவாக நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தால் காவலர் குடியிருப்புக்கு பின்புறம் தேங்கி இருந்த கழிவு நீரில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்
அப்போது பொதுமக்கள் தாங்கள் மழை காலத்தில் மட்டுமல்லாமல் மழைக்காலம் முடிந்த பின்பும் இங்கு தேங்கியுள்ள மழை நீர் மற்றும் கழிவு நீரில் வாழ்ந்து வருகிறோம் ரோடு வசதி இல்லை மின்விளக்கு வசதி இல்லை உள்ளிட்ட குறைகளை மேயர் ஜெகன் இடம் பொதுமக்கள் எடுத்துக் கூறினர்
ஒவ்வொரு தெருவாக நடந்தே சென்று அதிகாரிகளுடன் மேயர் ஜெகன் பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அப்போது பொதுமக்கள் நாங்கள் இங்கு தேங்கியுள்ள நீரால் அவதிப்படுகிறோம் என்று கூறினார் கள் அதற்கு மேயர் இந்தப் பகுதியில் இவ்வளவு பாதிப்பு உள்ளது
என்று எனக்கு யாரும் இதுவரை சொல்லவில்லை உங்களுடைய மாமன்ற உறுப்பினரும் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை நீங்கள் கூறியவுடன் நேரில் வந்து ஆய்வு செய்தேன் பகுதிகளை முழுவதும் பார்வையிட்டு உள்ளேன் படிப்படியாக அனைத்து வசதிகளும் 51 வது வார்டுக்கு செய்து கொடுக்கப்படும் நாளடைவில் மாநகராட்சியில் 51-வது வார அனைத்து வசதிகளும் பெற்றுள்ள பகுதி என்று கூறும் வரை பணிகள் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்று மேயர் ஜெகன் உறுதி அளித்தார் அப்போது அங்குள்ள கடைசி பகுதியில் நீரில் மின்கம்பம் சரிந்து மின் வயர் தேங்கியுள்ள தண்ணீரில் தொட்டு செல்லும் அளவுக்கு இருப்பதாக பொதுமக்கள் கூறினார்கள்
அதனை நேரில் பார்த்த மேயர் ஜெகன் உடனடியாக அந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு புதியதாக மின்கம்பம் நடப்பட்டு மின்சார வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டு உள்ளார் மேலும் அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக பொதுமக்கள் கூறினார்கள் உடனடியாக அதிகாரிகளிடம் அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்க வேண்டும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் ஆணையிட்டார்
சுமார் இரண்டு மணி நேரம் 51 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருகளுக்கும் அங்கு தேங்கி இருந்த கழிவு நீர் மழை நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார் அப்போது நேற்று மேயரை சந்தித்து புகார் அளித்த பொதுமக்கள் நாங்கள் புகார் அளித்தவுடன் உடனடியாக நேரில் வந்து தேங்கி இருந்த கழிவுநீரில் நடந்து சென்று மேயர் ஜெகன்ஆய்வு மேற்கொண்டது எங்களுக்கு வியப்பாகவே இருந்தது
இதுவரை இருந்த மாநகராட்சி மேயர்கள் யாரும் இதுபோல கழிவு நீரில் நடந்து சென்று ஒரு வார்டுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஒதிக்கி நேரில் வந்து ஆய்வு செய்தது எங்களுக்கு வியப்பாகவே உள்ளது எங்கள் வார்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்து தரப்படும் என்று மேயர் ஜெகன் உறுதி உள்ளார் அதிரடியாக பொதுமக்கள் சந்தித்து புகார் அளித்த பதினைந்து மணி நேரத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
இது பற்றி மேயர் ஜெகன் கூறுகையில் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடி மாநகரில் மக்கள் அளிக்கின்ற புகார் இருக்கும் மதிப்பளித்து உடனடியாக அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
அது போல தான் 51 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று என்னை நேரில் சந்தித்து மனுவளித்தனர் நான் நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பெற்றுள்ளேன் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் இதுபோல குறைகள் இருப்பதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை அந்த மக்களின் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று மேயர் ஜெகன் அந்தப் பகுதி மக்களிடம் உறுதியளித்துள்ளதாக கூறினார்
மொத்தத்தில் இன்று காலை 51 வது வார்டு மக்களுக்கு ஜாக்பாட் பரிசு அளித்துள்ளது நேரில் சென்று மேயர் ஜெகன் பார்வையிட்டு பணிகளை உடனடியாக நாளை முதல் ஒவ்வொரு பணியும் துவங்கப்படும் என்று கூறியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்