காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் ஊராட்சி குத்தனூர் பகுதியை சேர்ந்தவர் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி ஸ்டெல்லா மேரி (40) இவரது கணவர் சுரேஷ், இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கள்ளத்தனமாக சட்டவிரோதமான முறையில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த வரை 6 முறை மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெல்லா மேரியை நேரில் சந்தித்த மணிமங்கலம் காவல்நிலைய உளவுத்துறை காவலர் மதுசூதனன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த மூன்று மாதங்களாக திருந்தி வாழ்ந்து வந்துள்ளார் மேலும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வசதி ஏற்படுத்தி தரவும் ஸ்டெல்லா மேரி தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஸ்டெல்லா மேரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது கணவருக்கு 50000 ரூபாய் முன் பணமாக செலுத்தி புதிய ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார் மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன்.

சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணின் மறு வாழ்வுக்காக ஆட்டோ வாங்கி தந்த மணிமங்கலம் ஆய்வாளர் அசோகனின் செயல் பாரட்டுக்களை பெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *