துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மார்ச் 30 நம் தேதி மாலையில் “மலர்களின் மனமகிழ்” (ஆண்டு) விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சுகுணா தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த நிதியில் நிரந்தர கலையரங்கம் (விழா மேடை) அமைத்துக் கொடுத்த திருச்சி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் செ.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி ஆண்டு விழாவை துவக்கி வைத்தார்.

தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்,கராத்தே உள்ளிட்ட தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் கலை நிகழ்ச்சிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பள்ளி தலைமை ஆசிரியை பேசும் போது பள்ளிக்கு , ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் (நிரந்தர விழா மேடை) அமைத்து கொடுத்த திருச்சி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு அமைப்பாளர் சுரேஷ் குமாருக்கும்,பிரிண்டர்,ஸ்கேனர் வழங்கிய கோவிந்தபுரம் சிவகுமாருக்கும், பரிசு பொருட்கள் வழங்கிய திமுக நகர துணை செயலாளர் செ.இளங்கோவனுக்கும் நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் பேசும்போது, தனியார் பள்ளிக்கு நிகராக‌ மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கோவிந்தபுரத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்.

ஊராட்சி செயலர் பாஸ்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார்,கிளை அஞ்சல் அலுவலர் ராஜா,அக்ரி முத்துசாமி,ஒப்பந்ததாரர் வினோத், ஜே.எம்.எஸ் மணி,பிளக்ஸ் சதீஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செல்வகுமார், சசிகுமார்,ஹேமா மாலினி, சுதா, ரேவதி மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *