கோவை துடியலூர் ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை
பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்..ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஹிதாயத்துல் முஸ்லிமீன் சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
250 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த தொழுகையின் போது அனைவரும் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்..
தொடர்ந்து தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.இடப்பற்றாக்குறை காரணமாக ரம்ஜான் பண்டிகை தொழுகை மூன்று பிரிவாக காலை 7 மணி துவங்கி 07.45 08.45 என மூன்று ஜமாத்துகளாக ரம்ஜான் சிறப்பு தொழுகை சிறப்பாக நடைபெற்றது..
முதலாவது ஜமாத் பள்ளிவாசலின் பிலால் பீர்முகமது ,
இரண்டாவது ஜமாத் தலைமை இமாம் மௌலானா மவுலவி கமாலுதீன் அல்தாபி ,
மூன்றாவது ஜமாத் பள்ளிவாசலின் ஹாபிஷா முஹம்மது யாகூப் ஆகியோர் முன்னின்று நடத்தினர்..
மேலும் பள்ளிவாசல் தலைவர் சுல்தான் மைதீன், செயலாளர். அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்பு நொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்..