பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அகில இந்திய 24 வது மாநாட்டிற்கு கொடி ஏந்தி செல்லும் மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் குழுவினரை பாபநாசம் ஒன்றியம் சார்பில் உற்சாக வரவேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் லிஸ்ட் அகில இந்திய 24 ஆவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு கையில் ஏந்தி செல்லும் மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் கட்சி தோழர்களுடன் மதுரை மாநாட்டிற்கு செல்பவர்களை பாபநாசம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் முரளி தலைமையில் ஐம்பெற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன் மாநில குழு சாமி நடராஜன் மூத்த தோழர் காதர் உசேன் மாவட்டச் செயலாளர் சென்னை பாண்டியன் ஜெயபால் மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய செயலாளர் பிரகலாதன் மற்றும் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் என பலர் கலந்து கலந்து கொண்டு செங்கொடி ஏந்தி வந்த தோழர்களை வெளிய அனுப்பி வைத்தனர்.