திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள பஞ்சம் பட்டி ஊராட்சி ஒன்றியம் நத்தமாடி பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.
இச்ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 742 மாடுகளும்,300 மாடு வீரர்களும் இனைய தள வழியில் முன்பதிவு செய்திருந்தனர்.இவ்விழாவில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் என பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.கிழக்கு தாசில்தார் மீனாதேவி,மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ நாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கால்நடைகள் உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில், கால்நடை உதவி மருத்துவர் விக்னேஷ் மற்றும் மருத்துவ குழுவினர் கால்நடைகளை சோதனை செய்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதனை செய்தனர்.
மாவட்ட ஏ.டி.எஸ்.பி தெய்வம்,மகேஷ் மேற்பார்வையில், டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன்,சாணார்பட்டி போலீஸ் எஸ்.ஜ. பொன் குணசேகர் உள்பட 300 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் உட்பட 25 பேர் காயம் அடைந்தனர்.