திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பருவாய் பகுதியை சேர்ந்த வித்தியா 22 என்ற பெண் கோவை அரசு கல்லூரியில் பயின்று வருகிறார் இவர் கடந்த 30ஆம் தேதி வீட்டில் அனைவரும் வெளியே சென்று விட்டு மீண்டும் வந்து பார்க்கும் பொழுது பீரோ மேலே சரிந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இவரது உடல் பிரத பரிசோதனை செய்யாமல் புதைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கிராம நிர்வாக அலுவலர் பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ராமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண் உயிரிழந்த வீட்டில் தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர் மாணவி வித்தியா திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரை காதலித்து வந்ததாகவும் வித்தியாவை பெண் கேட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பிய போது பெண் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வித்யா உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காதலன் வெண்மணி இடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *