பெரம்பலூர் நகர்ப்பகுதியான, வெங்கடேசபுரம் பகுதியில் பிரபல தனியார் நிறுவனமான டார்லிங் வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூம் இயங்கி வருகிறது.இந்த ஷோரூம் பணியாளர்கள் ) 10 மணியளவில் வழக்கம் போல் ஷோரூமை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்
இந்நிலையில் இன்று நள்ளிரவு 1;30 மணியளவில் டார்லிங்க் ஷோரூமின் முதல் தளத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஷோரூமிற்கு அருகில் வசிப்பவர்கள் தீ விபத்தை அறிந்து ஷோரூமின் மேலாளரான சௌந்தர் என்பவரை தொடர்பு கொண்டு தீ விபத்து பற்றி தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் ஷோரூம் மேலாளர் சௌந்தர் பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்
தகவலின் பேரில் ஷோரூமிற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.இந்த தீ விபத்தில் ஷோரூமின் முதல் தளம் முழுவதும் சேதமடைந்தது.இது தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்
இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த ஏசி,வாஷிங் மிஷன்,கிரைண்டர்,பிரிட்ஜ் போன்ற சுமார் 1 கோடி மிதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள்,
கல்லாவில் வைத்திருந்த சுமார் 15,00,000(பதினைந்து லட்சம்) ரூபாய் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.நள்ளிரவில் டார்லிங்க் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தால் ஷோரூம் பணியாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகவில்லை,இந்த தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.