இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்ட வீட்டு மனைகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய வீடு ஆகியவற்றை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் அனைத்து வசதிகளையும் கொண்ட ‘ஜி ஸ்கொயர் உட்லேண்ட்’ என்னும் புதிய திட்டத்தை கோவை ராமநாதபுரத்தில் சென்ட்ரல் ஸ்டூடியோ பின்புறம் அறிமுகம் செய்துள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான
இந்த குடியிருப்பு டவுன்ஷிப்பில் 1.5 சென்ட் முதல் 5 சென்ட் வரையிலான 100க்கும் மேற்பட்ட மிகவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீட்டு மனைகள் உள்ளன. கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரத்தில் ஒரு சென்ட் விலை தற்போது ரூ.25 லட்சமாக உள்ளது, அதே நேரத்தில் ஜி ஸ்கொயர் ஒரு சென்ட் நிலத்திற்க்கு ₹21.9 லட்சம் கவர்ச்சிகரமான விலையில் மனைகளை வழங்குகிறது.

உங்கள் கனவு இல்லத்தை உடனே கட்டி குடியேறுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களும் ஜி ஸ்கொயர் உட்லேண்ட்டில் உள்ளது. இங்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள், தடையற்ற போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாப்பான சூழலுடன் கூடிய பிரீமியம் வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் அமைதியான சூழலுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

திருச்சி சாலையில் இருந்து ஒரு நிமிட தூரத்தில் அமைந்துள்ள இந்த டவுன்ஷிப், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை கொண்டு இருப்பதோடு சிறப்பான சாலை வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் அருகே பிஎஸ்ஜி டெக் மற்றும் பிற முன்னணி கல்வி நிறுவனங்களும், முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உள்ளன. மேலும் புகழ்பெற்ற பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் கேஎம்சிஎச் போன்ற மருத்துவமனைகளும், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவையும் அருகில் உள்ளன.

கோவை ரெயில் நிலையம், உக்கடம் மேம்பாலம் ஆகியவற்றிற்கு 5 நிமிட தூரத்தில் அருகாமையிலும், ரேஸ்கோர்ஸ், லுலு ஹைப்பர் மார்க்கெட், லட்சுமி மில்ஸ் ஆகிய பகுதிகளுக்கு எளிதாக செல்லும் வகையிலும் அமைந்து உள்ளன. கிருஷ்ணசாமி நகர், கிருஷ்ணா காலனி, ஜிவி ரெசிடென்சி, ராஜீவ் காந்தி நகர் போன்ற இதன் அருகே 2 கி.மீ.க்குள் உள்ள பகுதிகளில் 1 சென்ட் விலை சுமார் ரூ.40 லட்சமாகும். ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது, ​​ஜி ஸ்கொயர் உட்லேண்ட்டில் 1 சென்ட் விலை மிகவும் குறைவாகும். ஜி ஸ்கொயர் உட்லேண்ட்டில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ளது.

இந்த டவுன்ஷிப்பைச் சுற்றி கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிரபல மருத்துவமனைகள் என அனைத்தும் உள்ளன. கட்டுமானத் துறையில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கோவை நகரில் இந்த இடம் சிறப்பானதொரு மதிப்பைக் கொண்டுள்ளது. இது அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, உங்கள் முதலீட்டிற்கும் நம்பிக்கையான சிறந்த பலனை அளிக்கும்.

இங்கு குடியேறுபவர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வழங்குவதற்காக 20க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. அவற்றில் குறிப்பாக, மின்சார இணைப்பு, புயல் நீர் வடிகால், குடிநீர் இணைப்பு, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமரா, குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வழங்க ஒரு வருட இலவச பராமரிப்பு சேவை, மேலும் தெருவிளக்குகளுடன் கூடிய தார் சாலைகள், ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் முலம் வில்லாக்கள் கட்டுவதற்கான உதவி மற்றும் அனைத்து வீட்டு மனைகளும் எந்தவித வில்லங்கமும் இல்லாத வகையில் முறையான ஆவணங்களைக் கொண்டுள்ளது.

இது குறித்து ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், முக்கிய இடங்களில் உலகத்தரம் வாய்ந்த குடியிருப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களின் உறுதிப்பாட்டிற்கு சான்றாக எங்களின் புதிய ஜி ஸ்கொயர் உட்லேண்ட் உள்ளது. இங்கிருந்து கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையிலான போக்குவரத்து வசதி உள்ளிட்ட பிரீமியம் வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழலுடன், இந்த திட்டம் வீடு வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

கோவை நகரில் தாங்கள் விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இந்த திட்டம் அமைந்துள்ளதால், இடம் வாங்குபவர்கள் தங்கள் கனவு வீடுகளைக் கட்டுவதற்கான சிறப்பான வாய்ப்பை வழங்குகிறது. முக்கிய பொருளாதார மற்றும் சமூக மையங்களுக்கு அருகாமையில் உள்ளதால் இது குடும்பத்தினர், தொழில் வல்லுனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த டவுன்ஷிப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *