திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறைக்கு அருகிலுள்ள SIPCOT இன் தொழில்துறை பூங்காவில், முன்னணி உணவு மற்றும் பான நிறுவனமான பெப்சிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பான நிறுவனமான PepsiCo நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள். பல பிராண்டட் ஸ்நாக்ஸ் மற்றும் சாஃப்ட் டிரிங்குகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் இந்த நிறுவனம், இங்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிற உணவுப் பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனம் நில ஒதுக்கீடு செயல்முறைக்கான பெரும்பாலான அதிகாரப்பூர்வ செயல்களை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் மற்றும் உலகளவில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மணப்பாறை தொழில்துறை பூங்காவில் நிலம் ஒதுக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் PepsiCo நிறுவனமும் இணைந்துள்ளது. அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு வரை, வெறும் 13 நிறுவனங்களுக்கு மட்டுமே 99 ஆண்டு அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பல்வேறு நிறுவனங்களுக்கு 150 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது
முக்கிய நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று தெரிவித்தார். இது மற்ற நிறுவனங்களையும் SIPCOT பகுதியில் முதலீடு செய்ய ஈர்க்கும், இதன் மூலம் திருச்சி மற்றும் மாநிலத்தின் பிற பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகேயுள்ள SIPCOT (தமிழ்நாடு மாநில தொழில்துறை முன்னேற்ற கழகம்) தொழில்துறை பூங்காவில் நிலம் ஒதுக்கப்பட்ட ஒரு scaffolding manufacturing company நிறுவனம், முதலில் உற்பத்தி பணிகளை தொடங்கியது.
நிலம் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளன, மேலும் சில நிறுவனங்கள் கட்டுமான பணிகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன.
திருச்சி செய்தியாளர் அருள் மோகன்