தேனி நாடார் சரஸ்வதி தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
இந்த விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் தலைமை தாங்கினார் உறவின்முறை உப தலைவர் பி பி கணேஷ் பொதுச் செயலாளர் எம்.எம். ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் செயலாளர்கள் ஏ ஆர் மகேஸ்வரன் இணைச் செயலாளர் எஸ் நவீன் ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜி மதளை சுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசும் போது கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தந்தின் மூலமாக இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு பெற ஆக்கபூர்வமான துறையில் பயற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு பெறுவது குறித்து மாணவர்களுக்கு புரியுமாறு விளக்கி பேசினார்.
மேலும் கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பேராசிரியர்கள் அனைத்துத் துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு குரூப் டிஸ்கஷன் எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வு தயக்கமின்றி அனுகுவதற்கும் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருடம் தோறும் 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறதென்று மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்
கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் சி கார்த்திகேயன் வேலைவாய்ப்புத் துறையின் அறிக்கையை சமர்ப்பித்தார் மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களான வைஸர் ஸ் டாக் ஆக்ரான் எம் எஸ் சாப்ட்வேர் சொலியூசன் மேயோ டெக்னாலஜி கேவல் கார்ப் வெப்ராக்ஸ் யமஹா போன்ற நிறுவனங்களில் இருந்து கல்லூரியின் 130 மாணவ மாணவிகள் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் வேலை வாய்ப்பை பெற்று தங்களின் வாழ்க்கையை வளம் ஆக்கிக் கொண்டனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 130 மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை கல்வித்தந்தை டி ராஜ மோகன் மற்றும் இந்து நாடார்கள் உறவின் முறையின் நிர்வாகிகள் வழங்கி சிறப்பித்தனர் இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை யின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அனைத்து கல்லூரி நிறுவனங்களின் செயலாளர்கள் இணைச் செயலாளர்கள் கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர் எம் சத்யா வேலைவாய்ப்பு துரை ஒருங்கிணைப்பாளர் ஆர் சண்முகப் பிரியன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக செய்திருந்தனர் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எம் மாதவன் நன்றி கூறினார்