பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
தாராபுரம் நகர திமுக அலுவலகத்தில் ஒட்டப்பட்டு இருந்த முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பிளக்ஸ் பேனர் கிழித்துச் சென்றனர்.
திமுக உட்கட்சி பூசல் விவகாரம் முத்தியதால் முதல்வரின் பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் திமுகவினர் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகத்தில் நகர திமுக அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இதன் பராமரிப்பு பணிகளை தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில். இன்று மதியம் திமுக அலுவலகத்திற்கு வந்த நகரச் செயலாளர் முருகானந்தம் அலுவலகத்தின் முன்பு கடந்த இரண்டு வருடமாக சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படம் அடங்கிய பிளக்ஸ் பேனரை பார்த்தபோது அது சுவற்றில் இல்லாமல் காணாமல் போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகரச் செயலாளர் முருகானந்தம்
நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன். உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலருடன்
தாராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் மீதும் அவரது கார் ஓட்டுனர் சலீம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நகரச் செயலாளர் முருகானந்தத்திற்கும் நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் திமுக உட்கட்சி பூசலின் காரணமாக நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், நகர செயலாளர் முருகானந்தத்தின் திமுக அலுவலகத்தை சூறையாடியதுடன் பிளக்ஸ் பேனரை கிழித்து சென்றது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது முதல் கட்ட போலீஸ் விசாரணையில் தாராபுரம் நகர துணைச் செயலாளர் கமலக்கண்ணனின் டிரைவர் சலீம் என்பவர் பிளக்ஸ் பேனரை கிழித்ததாகவும் சலீமை பேனரை கிழித்து வரும்படி நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன் தூண்டி விட்டதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தாராபுரம் திமுகவினர் இரண்டு அணிகளாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.