திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இராமன் தலைமை வகித்தார்.
பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆண்டறிக்கையை திருவாரூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் பொருளாளரும், பள்ளியின் ஆலோசகருமான சரவணக்குமார் வாசித்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் செந்தில்குமார் பேசுகையில் திருவாரூர் மாவட்டத்திலேயே இப்பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டி சிறப்புரை
ஆற்றியதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் இணை அமைப்பாளர் உமா, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் திட்ட அலுவலர் முருகதாஸ், இசை ஆசிரியர் மீனாட்சி, உடற்கல்வி இயக்குனர் விஜய், உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.