திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.மோகன்ராஜ் மற்றும் திருவெற்றியூர் கிழக்கு பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் பி.ஜி.அவினாஷ் ஏற்பாட்டில் கிழக்குப் பகுதி செயலாளரும் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவொற்றியூர் குப்பம் மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, தர்பூசணி ஐஸ்கிரீம் ரோஸ் மில்க் இளநீர் கிர்ணி பழம் குளிர் பானங்கள் போன்றவற்றை வழங்கியவர் நடைபாதை கடையில் வியாபாரம் செய்யும் 100 ஏழைப் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு நிழல் குடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக: திருவொற்றியூர் தொகுதி பொறுப்பாளர் ஆரம்பாக்கம் கே. ஆறுமுகம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில 10 வது வட்ட கழக செயலாளர் எஸ்.தமிழ் செல்வன்
மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர் டி மதன் குமார் ஆகியோர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் , மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வைமா அருள் தாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஏ.ராஜ், சாந்தி பக்தன் , கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைதம்பி, பகுதி துணை செயலாளர் எம்.வி.குமார், கே.பிரபாவதி, இரா.குமரேசன் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பகுதி வட்ட அணிகளின் நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்