துறையூர் பிப் -19
திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026 அன்று மாலை 6மணியளவில் ஶ்ரீ பாக்கியலட்சுமி மஹாலில் நடைபெற்றது.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டியன் வரவேற்பு நிகழ்த்தினார்.
இதில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் லெனின் பிரசாந்த் காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வழக்கறிஞர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான மனுக்கள் பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் தேர்வுக்கான மனு வழங்கப்பட்டது. துறையூர் வட்டார தலைவர் பதவிக்கு கண்ணனூர் பிரீஸ் உ. சரவணன் மற்றும் செல்லின் பாளையம் அரவிந்த் ஆகியோரும்,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பதவகக்கு கண்ணன், பாண்டியன் ஆகியோர் மனு வழங்கினார்கள். இக்கூட்டத்தில் பிரீஸ்உ சரவணன் நன்றியுரை நிகழ்த்தினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்