திருத்துறைப்பூண்டி., பிப்.18

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் பாஸ்கர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நீலன் அசோகன், மாநில பொதுச் செயலாளர் தாஹிர், மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மாவட்ட துணைத் தலைவர் பழனியப்பன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சம்மந்தம் ஹாஜா மைதீன், செல்வகுமார், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் சாகுல் ஹமீது, முன்னாள் வட்டார தலைவர் சங்கர வடிவேலு, வட்டார விவசாய பிரிவு தலைவர் நாராயணசாமி ராஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜித் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ்
தலைவர் ரோஜர் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் கதிரவன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக நகர மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *