சின்னமனூர் பிடாரியம்மன் திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் மும்முரம் தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை ரோடு பைபாஸ் பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரி யம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 9.
04 . 2025. புதன்கிழமை காலை 9.30 முதல் 10:30 மணிக்குள் நடைபெற உள்ளதையொட்டி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
உத்தமபாளையம் தாலுகாவில் சின்னமனூர் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவில் வரலாறு நூற்றாண்டு பழமையான திருக்கோவிலான சிவகாமி அம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலின் உப கோயிலான அருள்மிகு பிடாரி யம்மன் திருக்கோவில் பழமையான சின்னமனூர் நகருக்குள் அமைந்துள்ளதால் நகர மக்களின் காவல் தெய்வமாக இருந்து அருள் பாலித்து வருகிறார்
இராஜசிம்மன் என்ற பாண்டிய மன்னர் வீரபாண்டியை தலைமையமாகக் கொண்ட அள நாட்டினை சீரும் சிறப்புமாக ஆண்டு வரும் போது பூலாவனத்தில் அமைந்துள்ள சுயம்பு பூலாநந்திஸ்வரர் கோயில் மன்னன் மேற்பார்வையில் வெகு விமர்சையாக பூஜை புனஸ்காரம் நடைபெற்று வரும் வேலையில் சுரபி நதியின் அக்கரையில் மார்க்கையன் கோட்டை விக்கிரம பாண்டீஸ்வரரை வழிபடும் நிலையில் அந்த பகுதியிலேயே தங்குமிடம் அமைத்து தங்கி இருந்து வருகிறார்
வடக்கே யிருந்து மன்னன் பெரும் படையுடன் மதுரை வந்து அங்கிருக்கும் கோயில்களை இடித்து திரவியங்களை கொள்ளையிட்டு தென்மேற்கு திசை நோக்கி அள நாட்டிற்குள் வரும் பொழுது சுரபி நதிகரையோரம் சிறப்பான சிவன் கோயில் இருப்பதாக அறிந்து பூலவனமருகே படைகளை தங்க வைத்து தானும் தங்கி இருக்கிறான் பகலில் யானையைக் கொண்டு கோயிலை இடிக்க படைத் தளபதியை அனுப்ப யாணை மண்டபத்தின் ஒரு புறத்தினை இடிக்க முற்படும்போது அவன் மீதும் யானை மீதும் விழுந்து இறந்து விட மன்னனே நேரடியாக களம் இறங்கி யானை கொண்டு இடிக்க வருகிறார்.
அந்த நேரம் சிவனருளால் இரு கண்களும் பறி போய் விடுகிறது. இருந்தபோதிலும் நான் விடமாட்டேன் என்று சுளுரைத்து தங்குமிடம் செல்ல பாண்டிய மன்னன் இராஜசிம்மன் பரமனிடம் வேண்டிக் கொள்ள சிவன் வீரபத்ரனையும் காளியையும் அழைத்து ஆணையிட சுரபி நதிப் பகுதிகளில் கனமழை பெய்து அதனால் பெருவெள்ளம் ஏற்படுத்தியது
படைவீரர்களை அழித்து இழுத்துச் செல்ல மிச்ச மீதி கரைகளிலும் மர உச்சிகளிலும் இருக்கும் படைவீரர்களை காளியும் வீரபத்திரனும் வெட்டி கழுகுக்கும் காக்கைக்கும் இரையாக்கி கோயிலையும் பாண்டிய மன்னர் மற்றும் மக்களையும் காப்பாற்றியதாக வரலாறு கூறுகிறது சுவாமி அம்மன் காளியை பிடாரி அம்மனாக இங்குள்ள மக்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிக்கொள்ள அன்றைய ஊரின் எல்லையில் இருந்து காவல் தெய்வமாக அரிகேசரி நல்லூரை காவல் காத்து வருகிறார்
மேலும் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் திருவிழா வைபவங்களுக்கு முன்னதாக தொடக்க நிகழ்வாக பிடாரி அம்மன் கோவிலில் காப்புக் கட்டி விழா தொடங்குவது மரபாகக் கொண்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இவ்வளவு சிறப்பு மிக்க இத்தளத்தில் அருட்கொடையாளர்கள் பஞ்சவர்ணம் பூசுதல் கருங்கல் பதித்தல் கதவு மற்றும் அலங்கார மண்டபம் கலை நயத்துடன் புதுப்பித்தல் என பல்வேறு திருப்பணிகள் தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் வருகிற பங்குனி மாதம் 26 ஆம் தேதி ஏப்ரல் 9ஆம் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அ. நதியா தக்கார் கோ. நாராயணி ஆகியோர் தலைமையில் மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அலுவலர்கள் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்தும் நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகம் காண வரும் ஆன்மீக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் கும்பாபிஷேகத்தை ஸர்வசாதகம் சிவகாமரத்னம் சிவஸ்ரீ ஹெச். பாலசுப்பிரமணியன் பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் கோலகாலமாக நடத்தும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.