திண்டுக்கல் ஙபழனி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு,11 இருக்கைகள் கொண்ட 17 பேட்டரி கார்களும், 23 இருக்கைகள் கொண்ட 8 பேட்டரி மினி பேருந்துகளும், இரண்டு டீசல் மினி பேருந்துகளும், பக்தர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பில் CEO ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வம் vice president அவர்களின் முன்னிலையில், 23 இருக்கைகள் கொண்ட, ரூபாய் 16,50,000 மதிப்புள்ள பேட்டரி மினி பேருந்து திருக்கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது.
தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 27 லிருந்து 28 ஆக உயர்ந்து, கிரி வீதியில் பக்தர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. என்ற விவரத்தை கோவில் அதிகாரி தெரிவித்தார்.