வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி 4-வது ஞாயிறு விழாவையொட்டி ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் 3000 பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும்.இவ்வாலயத்தில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற பாடைக் காவடி திருவிழாவும், கடந்த 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்ப பல்லக்கு விழாவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனி 4-வது ஞாயிறு விழாவையொட்டி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், ஆலயத்தின் முன்புறம் பக்தர்களுக்கு காலையில் நீர் மோர் வழங்கப்பட்டது. மதியம் 2000 பேருக்கு தயிர் சாதமும், மாலை 1000 பேருக்கு ரவாபாத்தும் வழங்கப்பட்டது. காலை, மதியம், மாலை என நீர் மோர், தயிர் சாதம், ரவாபாத் என 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் எம்.எம். சண்முகவேல், செயலாளர் பி.சாமிநாதன், சங்க ஆலோசகர் இரா.செல்வம் தலைமை பூசாரியார், பொருளாளர் வி.எஸ். குமார், துணைத் தலைவர்கள் என்.மாரிமுத்து, ப.பெத்த பெருமாள், கோ.சண்முக சுந்தரம் யாதவ், சங்கத் துணைச் செயலாளர்கள் Rtn க.குமரன், எம்.சத்யா (எ) கலியபெருமாள், வி.ஏ.வி.சூரியமூர்த்தி, சங்க மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் வெங்கடேஷ் சம்பத் எம்பிபிஎஸ், சங்க விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு செயலாளர் க.அப்பு ( எ) ரத்தீஷ்பாபு மற்றும் மாடகுடி சரவணன், டாஸ்மாக் ராமு, நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.