தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சிறுவர் பூங்கா அமைக்கும் இடம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பாஜக சிறுபான்மை பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் பிதேலிஸ் மாநகராட்சிக்கு புகார் மனு அளித்துள்ளார்.
இது கூறித்து அவர் கூறும் போது, ரோச் காலனி 4வது தெருவில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டிய இடத்தில் சிலர் சட்டவிரோதமாக கார் பார்க்கிங் மற்றும் மீன் கம்பெனி அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் ரோச் நகர் 2வது தெருவில் உள்ள SRM ஹோட்டல் நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் ரோச் காலனி 3வது தெரு முதல் 4வது தெரு வரை உள்ள 40 அடி அகல சாலையிலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி இடங்களை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மாநகராட்சி சொந்தமான இடத்தில் சமூக நலக் கூடம் அமைக்க வேண்டும் என்றார்.