திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப் பிரதேசங்களில் மட்டும் வளரும் தன்மை கொண்ட மர ரோஜா என்றழைக்கப்படும் ஜப்பானிக் ரோஜா கொடைக்கானல் மேற்கு மலைப்பகுதிகளில் பூத்துள்ளது.
ஆண்டுதோறும் பூக்கும் இவ்வகை பூ ஏப்ரல், மே யில் கோடையில் அதிகளவு பூக்கும். பூத்ததிலிருந்து 15 நாட்கள் வாடாமல் இருக்கும். மணம் வீசும் இம்மலரை அழகு தோரணங்கள் பயன்பாட்டிலும் சேர்த்து கொள்வர். இப்பூக்கள் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிலும் பூத்துள்ளது.