மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில்
ஸ்ரீ செல்லத்தம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா நடந்தது.
5 நாட்கள் நடந்த இந்த விழாவில் கன்னிமார்,அய்யனார்,சின்னகருப்பு,
பெரியகருப்பு,பைரவர்,உள்ளிட்ட தெய்வங்கள் கிராமத்தில் எழுந்தருளின.
தொடர்ந்து கிராம தெய்வங்களாகிய சித்திவிநாயகர்,முத்துகருப்பணசாமி, கிருஷ்ணசுவாமிகளுக்கு கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

செல்லத்தமனுக்கு பட்டு அணிவிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு பொங்கல் வைத்து ஜமீன்தாருக்கு மரியாதை செய்யப்பட்டு பரிவட்டம் கட்டி மாவிளக்கு எடுத்தனர். அம்மனுக்கு பொதுமக்கள் சார்பாக கிடாய் வெட்டுதல், பலவேஷம் தொடர்ந்து மாலை முளைப்பாரி ஊர்வலமும் நேற்று சக்திகுட்டிவெட்டுதல் கயிறு குத்துதல் மஞ்சள் நீராட்டுதலுடன் நடைபெற்றது .விழா ஏற்பாடுகளை கொண்டையம்பட்டி கிராம பொதுமக்கள், மற்றும் கிராம பொது நலசங்கத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *