பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள், பரங்கிபேட்டையில் தங்கியிருந்து தங்களது பயிற்சியின் ஒரு பகுதியாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ள புதுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “வீட்டுக் காய்கறி தோட்டம்” திட்டத்தில் மாணவிகள் பங்கேற்று பள்ளி மாணவர்களுடன் இணைந்து, காய்கறி செடிகளை நட்டு, அதன் பராமரிப்பு முறைகள், இயற்கை உரங்கள், நீர் மேலாண்மை போன்றவற்றை விளக்கியதுடன், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்.
இந்நிகழ்வு மூலம் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வேளாண்மை, சுயபோதியத் தோட்டம் அமைப்பது போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் பங்களிக்க வேண்டிய தருணங்களில் இத்தகைய முயற்சிகள் பாராட்டுக்குரியவை என பெற்றோரும் ஆசிரியர்களும் தெரிவித்தனர்.இந்த நிகழ்வை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் லிஷா , மாலினி, மேதினி, மேகனா, நந்தினி, நிலோபர்நிஷா, நிரஞ்சனா, நிஷாலினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்