மன்னார்குடி
ஒன்றிய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ 750 இருந்து ரூ 28 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது
இந்த கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கடந்த நான்கு தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசு விதித்துள்ள லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் தமிழக அரசு கனரக வாகனங்களுக்கான எப்சி கட்டண உயர்வுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.