திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பொதுமக்களின் நுகர்வு அதிகரிப்பால், கொய்யாப்பழத்தின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், தாசரிப்பட்டி, வேலூர், அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ராமபட்டினம்புதூர், விருப்பாச்சி, சத்திரப்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் ஏராளமான கொய்யாப்பழ தோப்புகள் உள்ளன. இது ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் பழமாகும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் கொய்யாப்பழம் வாங்கி சாப்பிடுகின்றனர். நுகர்வு அதிகரிப்பால் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனால், வியாபாரிகள் அதிக விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். கடந்த மாதம் 23 கிலோ பெட்டி கொய்யாப்பழம் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை, வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

ஆனால், தற்போது ஒரு பெட்டி கொய்யாப்பழம் ரூ.1600 முதல் ரூ.2000 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால், சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *