செய்தியாளர் வெங்கடேசன்

பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ242 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடம் மேம்படுத்துதல் பணி அடிக்கல் நாட்டுவிழா :-

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் ரூ242 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் நேர்கோடு மேம்படுத்துதல் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மயூரநாதன் முன்னிலை வகித்தார் செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார் மேலும் இந்த நிகழ்விற்கு பனப்பாக்கம் முதல் நிலைபேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி பூமி பூஜைக்கு குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் குலோத்துங்கள்,சாரதி செந்தமிழ்ச்செல்வன்.
சகிலா விநாயகமூர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மக்கள் நலம் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு பரிந்துரை செய்த அமைச்சர் காந்தி நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பனப்பாக்கம் பேரூர் கழக திமுக செயலாளர் (ம)வார்டு உறுப்பினர் என்ஆர்,சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *