கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம், கரூர் மாவட்டம் & மாநில அமைப்பு மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித் தொகை ரூ 1500,. மற்றும் கடுமையாக பாதிப்பு கொண்ட பயனாளிகளுக்கு ரூ 1,500 மற்றும் உயர்பாதுகாப்பு கொண்ட பயனாளிகளுக்கு ரூ1,000 என 3,000 வழங்கப்பட்டு வருவதை பிற மாநிலங்களில் வழங்குவது போன்று ரூ 6,000 மற்றும் கடுமையாக பாதிப்பு கொண்ட பயனாளிகளுக்கு 8,000 என வழங்கிட தமிழக அரசுக்கு பார்வைக்கு கொண்டு சென்றிட , மகாகவி மாவட்ட தலைவர், கரூர்.செ.கந்தசாமி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
கரூர் மாவட்ட மகாகவி மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட முறை மனுக்கள் அளித்து இலவச வீட்டு மனை பட்டா 16 மகாகவி உறுப்பினர்களுக்கு வழங்கிட வேண்டியும் விரைந்து வழங்கிட மறுத்தால்,
தலைமை செயலாலகத்தில் பேரணியாக வருகை புரிந்து குடியேறும் நிலையை உருவாகும் சூழலை கரூர் மாவட்ட தாலுகா அலுவலகம் செய்து கொடுக்க கூறியும், மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேலு ,அவர்களிடத்தில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தோம், இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்