பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சோழங்கநத்தம்
பழமைவாய்ந்த பாப்பாத்தி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா….
இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சோழங்கநத்தம் தெற்கு தெரு கிராமத்தில் எழுந்தருளியுள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஶ்ரீ பாப்பாத்தி அம்மன் ஆலயம் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 3 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கோவில் பாப்பாத்தி அம்மன் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது .
திருஞான புத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை சோழங்கநத்தம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.