கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூரில் தனியார் பள்ளி சார்பில் விதிகளை மதிப்போம் விழிப்புணர்வுடன் இருப்போம் விழிப்புணர்வு பேரணி 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையுடன் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.
கரூர் மண்மங்கலம் பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் காந்திகிராமம் பகுதியில் ‘விதிகளை மதிப்போம் விழிப்புடன் இருப்போம் வாக்கத்தான் என்னும் கருத்தை முன்னிறுத்தி 2025 ஆண்டுக்கான கரூர் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமை யேற்று நிகழ்ச்சியனை தொடங்கி வைத்தார்.
பிர்லா ஓபன் மைண்ட்ஸ் பள்ளி நிர்வாக செயல் அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் வினால்டன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 400க்கும் மேற்பட்ட பங்கு பெற்றனர்
அரசு விதிகளை கடையிடித்து நடப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையில் விழிப்புணர்வு பதாக ஏந்தி கரூர் திருச்சி சாலை மற்றும் காந்திகிராமம் புறநகர் வழியாக விளையாட்டு மைதானம் அருகில் முடிவடைந்தது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.