தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைப்பு
அண்ணா சிலை முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தினர் (தேமுதிக) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்தனர். இதனை முன்னிட்டு இணைப்பு விழா தாராபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது.

விழாவிற்கு திமுக நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சர்மிளா, மீனாட்சி, வள்ளியம்மாள், மாரியம்மாள், தெய்வானை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் ரஞ்சித் குமார், ஆனந்த், துணைச் செயலாளர் முருகேசன், இளைஞரணி செயலாளர் ராஜா, 3-வது வார்டு செயலாளர் சர்க்கரை பாபா, 12-வது வார்டு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
தாராபுரம் தேமுதிக பொருளாளர் கேப்டன் முனியப்பன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *