டிப்ளமோ ஆரிய எம்பிராய்டரி ஜவுளி யில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தகவல் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் தாட்கோ மற்றும் சென்னை வேளச்சேரியில் உள்ள விவோசியஸ் அகடாமி நிறுவனம் இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்க உள்ளது
இந்த பயிற்சியினை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தது 18 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் இந்த பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் பயிற்சியினை முழுமையாக முடிக்கும்
இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI natinal skill development of india அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும் மேலும் தங்கம் விடுதிப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உள்ளிட்ட செலிவனங்களை தாட்கோ மூலமாக வழங்கப்படும்
இந்த பயிற்சியினை பெற www.tahdco.com
என்ற இணையதள தாட்கோ முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் தாட்கோ அறை எண் 73 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04546.260995. என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.