செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்,மதுராந்தகம் சட்டமன்ற
உறுப்பினர் மரகதம் குமரவேல், கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு வரும் 2026 ல் எடப்பாடியார் அரியணையில் அமர வைக்க எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்றும்,
விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு
சட்டமன்ற உறுப்பினர் அவரது சொந்த செலவில் பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு அன்பு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வின் போது அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சந்திரபாபுசந்திரபாபு,உட்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,கிளை கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.