கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பாஜக தெருமுனை பிரசாரம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தொழிற்பேட்டை பகுதியில்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில்
ஒன்றிய தலைவர் சிந்தியா தலைமையில் பா.ஜ.க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.நாளை நமதே தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு பா.ஜ.க கிளைத்தலைவர்கள் பழனியப்பன்,வேலுச்சாமி,ரேவதி,அதிமுக கிளை செயலாளர் ராமலிங்கம், அதிமுக பகுதி செயலாளர் சீனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் P.R.ஆறுமுகம் மற்றும் பா.ஜ.க மாவட்ட செயலாளரும் சட்டமன்ற அமைப்பாளருமான காவேரி A. மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தப்பகுதியில் அதிகரித்துவரும் முறைகேடான மதுவிற்பனை,பெண்களுக்கான பாதுகாப்பின்மை,மேற்கு பகுதியில் காணப்படும் சாக்கடை பிரச்சனைபட்டியல் சமூக சகோதர,சகோதரிகளின்முன்னேற்றத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட தொகையினை பயன்படுத்த மனமின்றி திருப்பி அனுப்பிய திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை விளக்கி கூறினர். மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் பேசுகையில் இந்த தெருமுனை பிரச்சாரங்கள் விடியாத இந்த திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் இருந்து கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியினை மீட்டு பாரத பிரதமர் நரேந்திரமோடி அதிமுக பொதுச்செயலாளர்-முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தொகுதியில் வெற்றிபெற மிகப்பெரிய உந்துசக்தியாய் அமையும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும்,அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் இந்த கொடுங்கோல் ஆட்சியினை அகற்ற ஓரணியில் திரண்டு ஒரே குடும்பமாக உங்களிடம் வாக்கு கேட்க வருகிறோம்.
மக்களாகிய நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.இறுதியாக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சக்திகேந்திர பொறுப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.இப்பிரச்சார கூட்டத்தில் இப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.