திண்டுக்கல் உலகம்பட்டியை அடுத்த மாங்கரை ஆற்றங்கரையில் மோலையன் கொட்டத்தில் 8-ம் நூற்றாண்டு விநாயகர், நந்தி சிலைகள் உள்ளன.
விநாயகர் சிற்பம் 4 கைகளும் அதில் மோதகம், தந்தம், செண்டு எனவும் இரு காதுகள் நன்கு விரிந்த நிலையில் துதிகை இடது புறமும் சுருண்ட நிலையிலும் மார்பில் முப்புரி நூல் உள்ளது
இந்த சிற்பம் மிகத் தேய்ந்த நிலையில் உள்ளது திண்டுக்கல் பகுதியில் காலத்தால் முற்பட்ட விநாயகர் சிலை இதுவாகத்தான் இருக்கும் இந்த சிற்பம் ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது சிறிய சிவன் கோவில் கருவறைக்கு முன் இச்சிற்பம் இருந்திருக்க வேண்டும் சிற்பத்தின் மேல் இருபுறமும் சாமரம் வீசுவதும் உள்ளது பெரும்பாலும் சாமரம் வீசும் சிற்பங்கள் பல்லவர் கலைப் பாணிகளைக் கொண்டது. குடைவரைகளில் இது போன்ற சாமரம் வீசும் நிலையில் சிற்பங்கள் உள்ளது. இந்த விநாயகர் சிற்பம் முற்கால பாண்டியர் சிற்பம் ஆகும் நந்தி அழகுற செதுக்கப்பட்டுள்ளது பாண்டியர் கால கட்டை கொம்பு நந்தி அதன் காதுகள் நீள் வடிவிலும் கழுத்தில் திரிசரடணியும், திரிசரடணி கீழ் சலங்கை சரடும் அழகுற செதுக்கப்பட்டுள்ளன
விநாயகர் மற்றும் நந்தி சிற்பங்கள் பாண்டியர் கால சிற்பமாகும் என வரலாற்று ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.