கோவை இராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு நாகப்பன் வீதி பகுதியில் உள்ள இளைஞர்கள் இணைந்து மாற்றம் கிளப் எனும் சமூக நல்லிணக்க அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்..
இந்நிலையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விதமாக மாற்றம் கிளப் சார்பாக இராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு நாகப்பன் வீதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது..
இதற்கான துவக்க விழா, மாற்றம் கிளப் தலைவர் குமரேசன், துணைத்தலைவர் மகேந்திரன், செயலாளர் கதிரவன், துணைச் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சரவணகுமார், துணை பொருளாளர் மனோஜ் குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் மனோகரன், ஈஸ்வரன், பிரீமியர் சண்முகம், ரமேஷ், வசந்தகுமார், பிரகாஷ், முருகேசன், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்..
இந்நிகழ்ச்சியில் மாற்றம் கிளப் நிர்வாகிகள் கேபிள் பாபு, பாக்கியராஜ், பிரபு, தினேஷ், நரேந்திர பிரசாத், நவீன், கதிர்வேல், அமீன், ஞானசேகர், பிரகாஷ், புவன், சஞ்சய், அகிலன், தினேஷ்குமார், கார்த்திக், விக்னேஷ், சங்கர், பிருதிவி ஷாம் குமார் தமிழ் விஷ்ணு விஜயகுமார், அப்சல், ஆதில், மோனிஷ், ஜெய்சன், கௌஷிக், பிரதீப், அபிஷேக், ஹரி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா, உமா மகேஸ்வரி, சுகுணா, கலைச்செல்வி, வினிதா, பவித்ரா, ஹரிப்பிரியா, சானு, நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…