சமூகநீதி தொழிற்சங்கம் சார்பாக மே தின விழா
சமூக நீதி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் சமூக நீதி மினிடோர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு சமூகநீதி தொழிற்சங்கம் சார்பாக மே தினத்தை முன்னிட்டு கோவை பீளமேடு பகுதியில் ஆர்.பி.எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொடியேற்றினார்.. தொடர்ந்து சமூக நீதி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் சமூக நீதி மினிடோர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் பெயர் பலகையை திறந்து வைத்த அவர்,அண்ணல் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்..
தொடர்ந்து பொதுமக்களுக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூகநீதி தொழிற்சங்க நிர்வாகிகள் எல்.பெருமாள், தர்மராஜ், சிவகணேஷ், ராஜன், காந்தி பிரகாஷ், நாகராஜ், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.