தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டியில் செயல்பட்டு வரும் மிகச்சிறந்த கல்வி நிறுவனமான நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது
இந்த கருத்தரங்கில் கல்லூரியின் இயந்திரவியல் துறையில் அட்வான்ஸ்டு மெட்டீரியல் ப்ராஸசிங் அண்டு சஸ்டெயினபுள் எனர்ஜி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்கு மேல பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழுமத்தின் தலைவருமான கல்வித்தந்தை டி ராஜ மோகன் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் செயலாளர் ஏ. ராஜ்குமார் தலைமை வகித்தார்
கல்லூரியின் செயலாளர் ஏ எஸ் ஆர் மகேஸ்வரன் கல்லூரியின் இணைச் செயலாளர் எஸ் நவீன் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இயந்திரவியல் துறையின் தலைவர் டாக்டர் பி. ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி மதளை சுந்தரம் எனர்ஜி கன்சர்வேசன் முக்கிய தத்துவத்தை பற்றி மாணவ மாணவிகள் புரியும்படி விளக்கி பேசி வாழ்த்துரை வழங்கினார்
இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலம் பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பேராசிரியர் டாக்டர் பி பால்பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொறியியல் துறையில் மெட்டிரீயல் மற்றும் எனர்ஜி தொழில் நுட்பம் பயன்படும் விதம்.3D பிரிண்டர் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சியில் மெட்டாலிக் பிரின்டட்டு பயன்பாடு அவுட்டிங் மேனுபெக் சரிங் முக்கியத்துவம் கார்பன்பைவ் ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பற்றி மாணவ மாணவிகள் புரியும் படி விளக்கிப் பேசினார்.
பயோ மெட்டீரியல் தொழில்நுட்பம் எவ்வாறு மருத்துவத் துறையில் பயன்படுகிறதென்றும் இயந்திரவியல் செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கும் ஆராய்ச்சி ஹைட்ரஜன் எனர்ஜி தொடர்பான ஆராய்ச்சி பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் போன்ற ஆராய்ச்சிகளில் பொறியியல் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சிக்கு அரசு வழங்கும் நிதியை மாணவர்கள் எவ்வாறு பெறுவது பற்றியும் எதிர்கால சன்னதியினருக்கு தேவைப்படும் மெட்டிரியல் எனர்ஜி லித்தயம் பேட்டரி பயன்பாடு இயந்திரவியல் துறையில் அட்வான்ஸ் மெட்டீரியல் ஆகிய வற்றை மாணவ மாணவிகளுக்கு விளக்கிப் பேசினார் இந்த கருத்தரங்கில் மலேசியா ஏமன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் நம் இந்திய திருநாட்டின் ஒரு அங்கமான மத்திய பிரதேசம் இருந்து பிற மாநிலங்களை சார்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து 200. க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 90.க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர் மேலும் அடிட்டிவ் மேனு பேக்சரிங் சஸ்டேயினபுள் எனர்ஜி தொடர்பான தகவல்களை பற்றிய அறிவினை பெற்று கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ மாணவிகள் பயனடைந்தனர் நிகழ்ச்சியில் உபதலைவர் பி.பி கணேஷ் பொதுச் செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எம் மாதவன் டாக்டர் எம் சத்யா வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் சி கார்த்திகேயன் இந்த கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். சாந்த சீலன் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கருத்தரங்கில் பங்கேற்றவர்களை கனிவுடன் உபசரித்தனர் கல்லூரி இயந்திரவியல் துறையின் பேராசிரியர் ஏ. வென்னிமலை ராஜன் நன்றி உரையாற்றினார்.