காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆடிப் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் துவக்க விழா அட்சய திருதியை முன்னிட்டு மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் டி.சுந்தர்கணேஷ் மற்றும் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இயங்கி வரும் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் எம்.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூலினை திறந்து வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் எஸ் சில்க்ஸ் சிவசிதம்பரம், பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு வருகை தந்தவர்களை சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் எஸ். குணசேகரன் சால்வை அணிவித்து வரவேற்று உபசரித்தார்.

இந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சிறந்த முறையில் கைதேர்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு முறைப்படி கற்றுத்தந்து ஓட்டுனர் உரிமம் பெற்று தருகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்கள் கற்றுக்கொள்ள வரும் பெண்களுக்கு, பெண் ஆசிரியர்கள் மூலம் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *