மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நீட் தேர்வு தொடங்கியது நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் பிடிஎஸ் மற்றும் சித்தா ஆயுர்வேத யுனானி மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி தேர்வான நீட் நுழைவுத் தேர்வு ஆரம்பமாகியது
தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சென்னை மதுரை திருச்சி திருநெல்வேலி கன்னியாகுமரி உட்பட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர் இத்தேர்வானது பிற்பகல் ஒன்றரை மணிக்குள் தமிழ் ஆங்கிலம் இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் தேர்வு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெளிவாக அவர்களுடைய ஹால் டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது
புரிந்து கொண்டு மாணவர்கள் இன்று காலை முதலே தேர்வு எழுதும் மையங்களுக்கு வரத் தொடங்கினர் திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாதிதா இந்து கல்லூரி பள்ளியில் சுமார் 860 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு அட்டை போட்டோ விரல் ரேகை சரிபார்க்க பெற்று தேர்வு எழுதும் அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி மாநகர காவல் துறை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மாணவ மாணவிகள் வருவதற்காக சிறப்பு பேருந்துகளும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.