தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் : இருசக்கர வாகனத்தில் சுற்றுலா. பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து கணவன் மனைவி உயிரிழப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ்(40) ஆனந்தி(35) அவர்களது மகள் தீக்ஷிதா(15) என மூவரும் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் திருநள்ளாறு கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு நேற்று இரவு அவர்களது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர் இவர்கள் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது பாலத்திற்காக தோண்டி வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்படாத பள்ளத்தில் இருட்டில் நிலை தடுமாறி விழுந்தனர் இந்த விபத்தில் நடராஜ் மற்றும் ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இவர்களது மகள் தீக்ஷிதா படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விபத்து குறித்து குண்டடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.