கோவை

இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கோவையைச் சேர்ந்த 9 இளம் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை ஹைலைட்ஸ் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல் திறன் ஆய்வாளராக உள்ள ஹரி பிரசாத் மோகனுக்கு பாராட்டு விழா கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.இதில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் இளம் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மையத்தின் நிர்வாகிகளான நிலேஷ் ஷா மற்றும் பிரேம்குமார் உள்ளிட்டார், கடந்த 2003 ஆம் ஆண்டு கோவையில் துவங்கிய தங்களது பயிற்சி மையம் 22 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்து வருவதாக குறிப்பிட்டனர்.தங்களது பயிற்சி மையத்தில் இளம் மாணவனாக இணைந்து தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் செயல் திறன் ஆய்வாளராக உயர்ந்துள்ள ஹரி பிரசாத் மோகன் மிகச்சிறந்த ஒரு வீரராக திகழ்ந்ததாகவும் அதேபோல் தங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற ராதாகிருஷ்ணன் தற்பொழுது 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் 2017 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருவதாகவும் கூறினர்.

இதேபோல் கிருபாகரன், தானிஷ் ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணியின் வீரர்களாகவும் கிரிஷாந்த் பிரேம்குமார் 16 வயதிற்கு உட்பட்ட கோவை மாவட்ட கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் திறன்மிக்க அனைத்து வீரர்களுக்கும் இந்திய அணியில் சிறப்பான இடம் கிடைப்பதாகவும் பணம் இருப்பவர்கள் மட்டுமே கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்பது தவறான கருத்து எனவும் கூறியதுடன், கிராமிய பின்னணியில் இருந்து வந்த தமிழகத்தின் நடராஜன் அதே போன்று பானி பூரி விற்று வந்த ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் ஜொலித்து வருவதாகவும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது ஊரில் டர்ஃப் அமைத்து ஐப்து வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அனைத்து போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை செலுத்தியதாகவும் நடக்கவுள்ள டி என் பி எல் கிரிக்கெட் தொடரில் கோவையைச் சேர்ந்த 9 இளம் வீரர்கள் விளையாட இருப்பதாகவும் தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *