இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பெருநாழியில் நடைபெற்ற திமுக அரசின் நான்கு ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கி, நான்கு ஆண்டுகால சாதனை திட்டங்கள் அனைத்தும் பாமர மக்கள் வரை எந்த வித பாகுபாடும் இல்லாமல் சென்றடைந்து இருப்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை கழக பேச்சாளர் இயல் அரங்கனல் திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், முன்னாள் சேர்மன் தமிழ்ச்செல்விபோஸ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் காந்தி, காளீஸ்வரி,முருகன்,உதயகுமார்,கிருஷ்ணசாமிஆத்திமுத்து, போஸ்,
இராமசாமி, கந்தசாமி செந்தூரான், மாரிச்சாமி, முனிசாமி, சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தெற்க்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில், கிளைச் செயலாளர் மஞ்சூர்அலிகான் ஆகியோர் நன்றியுரையாற்றினர். மேலும் கூட்டத்தில் கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், அணி அமைப்பாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமான 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.