திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் வேடமிட்ட பெருமாள் குதிரை வாகனத்தில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார்.
ஏராளமான பக்தர்கள் அழகரை கோவிந்த கோஷம் எழுப்பி வணங்கினர். சர்க்கரை, அவல், பொரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.