நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன் மனைவி கீதாவை மர்ம நபர்கள் வெட்டி கொலை. தடுக்க சென்ற ஜெகதீசனுக்கு வெட்டு. படு காயம் அடைந்த ஜெகதீசன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(38) இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இந்து முன்னணியில் இருந்து வருகிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் இருந்து வரும் இவர் இந்து முன்னணியின் முழு நில ஊழியராக செயல்பட்டு வருவயதாக கூறப்படுகிறது. இவரது மனைவி கீதா(36) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது நள்ளிரவு வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு கீதா கதவை திறந்து உள்ளார். அப்போது அங்கு இருந்த மர்ம நபர்கள் ஜெகதீசன் மனைவி கீதாவை அறிவாளால் வெட்டியுள்ளனர்.இதனை பார்த்த ஜெகதீசன் அதை தடுக்க முயன்றுள்ளார் இதில் அவருக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை வெளியே தள்ளி கதவை உள்பகுதியில் தாலிட்டுக் கொண்ட சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. மர்ம நபர்கள் வெட்டியதில் கீதா சம்பவ இடத்திலேயே பலியானார்
வெட்டுக்காயம் அடைந்த ஜெகதீஷை ஆக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெகதீசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் பொத்தனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.