திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கம் மாவீரன் குமரன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க பாடுபட்டு தன்னுயிர் நீத்த முன்னோடி எஸ்.குமரன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தின நாளை போற்றும் வகையில் திருவாரூர் நகர செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற
இந்த நிகழ்வில் மாவீரன் எஸ்.குமரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாளை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியும் வீரவணக்கத்துடன் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினன் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் C,செந்தில் அரசன், மாவட்ட துணைத் தலைவர் V,மணிமேகலை , மாவட்ட செயலாளர் K, ரவி , ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் கழுகு S,சங்கர், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் MR, லோகநாயகி, மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.