பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு தீர்த்தவாரி …..
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை மாத பௌர்ணமி பிரமோற்சவ திருவிழா கடந்த 1 தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் காலை மற்றும் மாலை இருவேளையும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது அது சமயம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்தி புறப்பட்டு குடமுருட்டி ஆற்றிற்கு சென்றது.
அங்கு தவள வெண்ணகையால் பாலைவனநாதர் சாமியுடன் பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேல தாள வாத்தியங்கள் முழங்க சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்தியுடன வீதியுலா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிபட்டனர்.விழாவின் ஏற்பாடுகளை திருப்பாலைத்துறை சிவப்பேரவை அன்பர்கள் செய்திருந்தனர்.