வால்பாறை – பெரியகருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமம் விழா
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பெரியகருமலை நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினர் ஒருங்கிணைந்த குடும்ப விழா சக்திவேல் தலைமையில் நடைபெற்றது
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் முனியாண்டி ராமாத்தாள், தர்மராஜ், முனியாண்டி ஆசிரியர்கள் குமர லிங்கம், மாரிமுத்து ஆழியாறு காவல்நிலைய தலைமைக் காவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மேலும் விழாவில் முன்னாள் இந்நாள் மாணவர்களுக்கும், முன்னாள் இந்நாள் ஆசிரிய பெருமக்களும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது
அதைத்தொடர்ந்து மாணவர்கள் கல்வித்தரத்தை மேம்படுத்துவது குறித்தும் எதிர்கால நலன் குறித்தும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு சிறப்பு வாய்ந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த வேல்பாண்டி, வன்னியராஜ்,லட்சுமணன், மகேஷ்வரன் மற்றும் ஆர்த்தி பிரகாஷ் ஆகியோர்களின் துரித பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்