தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர், தாராபுரம்.
தமிழ் சினிமா திரைப்பட நடிகையும், சின்னத்திரை சீரியல் நடிகையுமான புவனேஷ்வரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ரெட்டார வலசில் பிரத்தியங்கிரா தேவி பீடம் ஒன்றை நிறுவியுள்ளார்.அதில் தினந்தோறும் பூஜைகளும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அந்த கோவிலில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூஜையின் முடிவில் நடிகை புவனேஸ்வரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- நமது பிரத்தியங்கிரா கோவிலில் குரு பெயர்ச்சி யாகம் மதியம் 1.20 மணியிலிருந்து 1.37 மணிக்குள் நடந்து முடிந்தது. அகஸ்தியரால் உருவாக்கப்பட்ட பிரத்யங்கிரா தேவி கோவிலில் குரு பெயர்ச்சி யாகத்தில் யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைத்தது நடைபெறும்.
வரும் நாட்களில் கோவிலின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற செப்டம்பர் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் போரில் பிரதமர் மோடி சரியான முடிவு எடுத்துள்ளார். நம் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் சாதி,மத பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வருகிறோம். பிரிவினை பார்ப்பது அவரவர் பார்வையில் உள்ளது. வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நடிகை புவனேஷ்வரி கூறினார்